தலவாக்கலையில் சடலமொன்று மீட்பு!!

446

 

ஹட்டன் – தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் இன்று காலை 6 மணியளவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் சென்ற பாதசாரதிகள் வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் சுமார் 65 – 70 வயது மதிக்கதக்கவர் எனவும், இதுவரையில் அவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.