போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை நடத்தும் அனைத்துலக அழைப்புகளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புறக்கணித்து வருகின்ற நிலையில் இலங்கைக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நேற்று வொசிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி நிஷா தேசாய் பிஸ்வால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் இலங்கையிடம் அனைத்துலக சமூகம் காட்டும் பொறுமை குறைந்து விடும்.
குறிப்பாக பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தனது சொந்தமான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ள வேண்டும். தனது சொந்த நடைமுறைகளின் ஊடாக இலங்கை இந்த விவகாரங்களுக்குப் பதிலளிக்கும் என்பதையே நாம் விருப்புடன் எதிர்பார்க்கிறோம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கையால் அதனைச் செய்யமுடியும் என்று நம்புகிறோம்.
உண்மையான முன்னேற்றம் இல்லாவிட்டால் அனைத்துலக சமூகத்தின் பொறுமை குறைந்து போகத் தொடங்கி விடும் என்று அவர் கூறியுள்ளார்.





