சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 7 ஆண்டு கடூழியச் சிறை!!

611

abuseசிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு மொனராகலை மேல் நீதிமன்றம் நேற்று 7 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

பிபிலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலிக்கெட்டிய பிரதேசத்தில் 2011ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி 7 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கான்ஸ்டபிள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

குற்றம் சுமத்தப்பட்ட வருக்கு எதிரான சாட்சியங்களும் ஆதாரங்களும் கான்ஸ்டபிள் குற்றவாளி என நிரூபித்துள்ளதால் அவருக்கு 7 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கிஹான் எச் குலதுங்க தெரிவித்தார்.

இந்த சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீட்டு தொகையை வழங்குமாறும் உத்தரவிட்டார்.