தனது மனைவியின் முதலாம் கணவரது பிள்ளையான 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிறிய தந்தையை கைது செய்ய மாதம்பே பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாதம்பே – வெல்லவாகர பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சிறுமிக்கு 2 வயது இருக்கும்போது தந்தை மரணமடைந்துவிட்டார். அதன் பின் தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இரத்தினபுரி – கலவான பகுதியைச் சேர்ந்த தாயின் இரண்டாவது கணவர். சிறுமியின் அறைக்குள் சென்று அவரை கொலை செய்வதாக மிரட்டி பாலியல் வல்லுறவு புரிந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முதல் சம்பவம் நடைபெற்ற வேளை தனது தாய் நோய்வாய்பட்ட நிலையில் வீட்டில் இருந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். அதன்பின் தாய் வீட்டில் இல்லாத தருணங்களில் சிறிய தந்தை தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாதம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





