மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவற்றுக்கு மகிந்த மீண்டும் பிரதமராகலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கும் பிரேரணையினை எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிலைமை காணப்படுகிறது.
இது தொடர்பில் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றோம். எனவே சரியான நேரத்தில் நாம் மகிந்தவை பிரதமராக்கும் பிரேரணையை முன்வைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
-தமிழ்வின்-





