வவுனியாவில் பாடசாலை மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட அதிபர் கைது!!

1074

 

அதிபர் கைது

வவுனியாவில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் பாலியல் சேஷ்டைகள் துன்புறுத்தல்கள் செய்து வந்த பாடசாலை அதிபரை வவுனியா பொலிஸார் நேற்றையதினம் (04.01.2019) கைது செய்துள்ளனர்.

க.பொ.சாதாரண தர மாணவிகளிடம் அங்க சேஷ்டை புரிந்து வந்துள்ளதாகவும் பிரத்தியேக வகுப்பு என்று அழைத்து மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனவும்,

மாலை நேர பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்துவதுடன் அதிலும் மாணவிகளுக்கு என விசேடமாக வகுப்புக்கள் நடாத்துவதுடன் கண்களை மூடி தேவாரம் பாடிக்காட்டவேண்டும் என்றும் அந்நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார் என குறித்த பாடசாலை அதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொறுமை இழந்த மாணவிகள் தமது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியதையடுத்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது இதனையடுத்தே அதிபர் கைது செய்யப்பட்டார்.

55 வயதுடைய அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.