பதினைந்தாம் பொருத்தம்..

1


எந்தக்கடையிலும்
கிடைக்காத ஒன்றை
தேடுகிறேன்
எனக்கது கிடைக்காது
என்று தெரிந்தும்.

எட்டாத கனி
என உனை நினைத்தேன்
இருந்தும் முயற்சித்தேன்
எட்டிவிட்டேன்
கட்டியும் அணைத்தேன்.


தொட்டிலில் புது
சொந்தம் கிடைத்தது
மட்டில்லை மகிழ்விற்கு
இருந்தும்
தொடரவில்லை….

தொடர்ந்தது கருத்துமோதல்
இருண்டது என் மனவானம்
விடிந்திட சூரியன் இல்லை..தொலைந்தது நிம்மதி
அதைத்தான் தேடுகின்றேன்….

இருமனம் சேர்ந்து
திருமணம் கொண்டாலும்
இருவர் பணமதும்
சரியாய் பொருந்திட
வேண்டும்.


பதின்நான்கு பொருத்தத்தில்
புதிதாய் இணைந்த
பதினைந்தாம் பொருத்தம்
பணம்..

-திசா.ஞானசந்திரன்-