வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் மரதன் ஓட்டப்போட்டி!!

577

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய மாணவர்களுக்காக வருடா வருடம் இடம்பெறும் மரதன் ஓட்டப்போட்டி நேற்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கதிரேசன் சுவரணராஜா தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலாம் வருட ஆசிரிய மாணவர்களில் 50 ஆண்களும் 223 பெண்களும் போட்டியில் பங்குபற்றினர்.

இப்போட்டியில் ஆண்ஆசிரிய மாணவர்களில் உடற்கல்வி பாடத்துறையைச் சேர்ந்த செலவன் எஸ்.விதுசன் முதலாம் இடத்தினையும் விவசாயத்துறையினைச் சேர்ந்த எம்.பூவரசன் இரண்டாம் இடத்தினையும் உடற்கல்வி துறையினைச் சேர்ந்த எ.கிரியோன் குரூஸ் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

பெண் ஆசிரிய மாணவர்கள் சார்பாக உடற்கல்வித் துறையினைச் சேர்ந்த செல்வி பி.சோபனா முதலாம் இடத்தினையும் இந்துசமய துறையினைச் சேர்ந்த கே.கயல்விழி இரண்டாம் இடத்தினையும் உடற்கல்வித் துறையினைச் சேர்ந்த செல்வி எ.யூஜினா மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வு பெற்ற பீடாதிபதி கு.சிதம்பரநாதன் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வீர்ர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை வழங்கி கௌரவித்தார்.