வவுனியாவில் மரத்தில் தீப்பற்றியமையால் பதற்றம்!!

978

 

மரத்தில் தீ

வவுனியா சிவபுரம் பகுதியில் இன்று (05.01) இரவு 8.30 மணியளவில் மரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையால் பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

சிவபுரம் பகுதியில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள ஆலமரத்திற்கு அக்காணியில் வசிப்போர் வழைமைபோல விளக்கு ஏற்றி வந்துள்ளனர். இந்நிலையில் ஏற்றபட்ட விளக்கின் மூலம் மரத்தில் தீப்பற்றியுள்ளது.

இதனால் மரத்தின் ஒருபகுதி பற்றிஎரிந்து முறிந்து விழுந்துள்ளது. சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவிற்கு பூவரசங்குளம் பொலிசாரால் தெரியபடுத்தபட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.