பல்கலைக்கழக மாணவர்கள் 22 பேருக்கு சிறைத் தண்டனை!!

704

jailகலகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 22 மாணவர்களுக்கு தலா ஒரு வருடம் என்ற 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்து அனுராதபுரம் நீதவான் சந்திம எதிரிமான்ன உத்தரவிட்டுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தி காயம் ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை, பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் மாணவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி உட்பட 12 பேர் மிகிந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.