ஆளில்லாமல் தானாகவே ரயில் என்ஜின் கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம் செய்துள்ளது. இன்று அதிகாலை 1.30 அளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளது.
ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி தானாகவே இவ்வாறு இரத்மலானை நோக்கிப் பயணித்துள்ளது.
இடையில் எந்தவொரு இரயிலும் வாராத காரணத்தினாலும் மக்கள் நடமாடாத காரணத்தினாலும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை.
எவ்வித பாதிப்பும் இன்றி இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியுள்ளனர். இன்று அதிகாலை குறித்த ரயில் மணிக்கு ஐந்து கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது.
கொழும்பிலிருந்து சென்றவர்கள் குறித்த ரயில் இயந்திரத் தொகுதியை நிறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.





