பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீhப்பளிக்கப்பட்டுள்ளது.
16 வயதுக் குறைந்த தனது மருமகள் முறையான பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருக்கே மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி.சந்தரமணி விஸ்வலிங்கம் இத் தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
இதேவேளை குற்றவாளி 25000 ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75000 ரூபாவும் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளதுடன் அதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவம் தீர்ப்பளித்திருந்தார்.




