பிரபல தமிழ்ப்பட நடிகர் வீட்டு வாசலில் தீக்குளித்த ரசிகர் பரிதாபகமாக உயிரிழப்பு!!

1


 

தீக்குளித்த ரசிகர்


நடிகர் யஷின் தீவிர ரசிகர் ஒருவர் அவர் வீட்டு வாசலில் தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யஷ் நடிப்பில் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்தார்.


அத்தகையவர் இறந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.


அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மருத்துவமனையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தபோது யஷ் வருவாரா, அவரை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியுள்ளார் ரவி. இறுதியில் யஷ் வந்தபோது அவரை பார்த்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பின்னர் ரவி இறந்துவிட்டார். ரவியின் மறைவால் யஷ் மிகுந்த மனவேதனையில் உள்ளார்.

இது குறித்து யஷ் கூறுகையில், ரசிகர்கள் அன்பு வைக்க வேண்டியது தான். அதற்காக தற்கொலை செய்வது, தங்களை காயப்படுத்திக் கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. இனி யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் நான் வர மாட்டேன் என் மீதான அன்பையும், மரியாதையையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.