ஆட்ட நிர்ண சதி : நியுசிலாந்து வீரர்களுக்கு எதிராக விசாரணை!!

466

New Zealand Teamகிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதிகள் தொடர்பில் நியுசிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மோசடிகளுக்கு எதிரான மற்றும் பாதுகாப்பு குழு இந்த விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நியுநிலாந்து கிரிக்கட் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனினும் இது நியுசிலாந்து கிரிக்கட்டுக்கு ஏற்பட்டுள்ள துரதிஸ்டவசமான சம்பவம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.