கப்பல்கட்டும் ரகசியத்தை வெளியிட்ட நபருக்கு ஆயுள் தண்டனை??

300

chinaகப்பல்கட்டும் விடயம் சம்பந்தமான இரகசியத் தகவல்களை சீனாவுக்கு அனுப்ப முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கிங் குண்டின் ஹோங் என்ற கனடா நபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றின் வெளியே ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய அவரது வழக்கறிஞரான ஜோன் லீ, ஜாமின் கோரிய விடயம் சம்பந்தமான வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

53 வயதான கிங் குண்டின் ஹோங் சிறிது நேரம் தனது வழக்கறிஞருடன் உரையாடியதாகவும் தெரியவருகிறது. மேலும் இவருக்கு எதிராக பாதுகாப்பு தகவல் சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவருக்கு எதிரான இந்த குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இவரது வழக்கறிஞர் இவர் எவ்வாறான குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார், தான் எந்த குற்றச்சாட்டுக்கு எதிராக வாதடுகிறார் என்பது குறித்த தகவல்களை ஊடகங்களிடம் தெரிவிக்கவில்லை..