மனைவியின் உடலை கூறுபோட்டு வீடு முழுவதும் மறைத்து வைத்த கொடூர கணவர்!!

678

MURDERமும்பையில் மனைவியின் தலையை வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானே பகுதியில் உள்ள நட்சத்திரா டவர் என்ற கட்டிடத்தின் 14வது மாடியில் வசித்து வருபவர் கிரிஷ் ஸ்ரீரங்க் போடே(37). ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மதுமதி(32). குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிஷ் தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து மனைவியை துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டேன், உடல் பாகங்களை வெளியே வீச வேண்டும். தனியாக இதனை செய்வதற்கு பயமாக உள்ளது எனவே உதவிக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனே மிராரோடு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து பொலிசார் கிரிஷின் வீட்டிற்கு சென்று கிரிஷிடம் மதுமதி பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால் அவர் பதில் எதுவும் கூறாததால் பொலிசார் வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தியுள்ளார்கள்.
அப்போது குளியலறையில் இடுப்புக்கு கீழே ஒரு பெண்ணின் உடல் பாகம் ரத்தக்கறையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதேபோல வீட்டில் உள்ள பிரிட்ஜில் தலை, கைகள், கழுத்தில் இருந்து இடுப்பு வரையிலான உடல் பாகங்கள் தனித்தனியாக அட்டைப்பெட்டிகளில் வைத்து கட்டி, பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவை அனைத்தும் மதுமதியின் உடல் பாகங்கள் என்பது தெரியவந்தது.

உடல் பாகங்களை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் கிரிஷிடம் நடத்திய விசாரணையில் மதுமதியை கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டதை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் இந்த கொலைக்கான காரணம் குறித்து கூறுகையில், மதுமதிக்கு வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. நான் வேலைக்கு சென்ற பின்னர் அந்த வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் மதுமதி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்த சம்பவம் எனக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதனால் அந்த வாலிபர் உடனான கள்ளத்தொடர்பை விட்டுவிடும்படி மதுமதியை எச்சரித்தேன். இருப்பினும் மதுமதி அந்த வாலிபருடனான தனது கள்ளக்காதலை துண்டிக்கவில்லை.

மனைவியின் கள்ளக்காதலால் நான் அவமானம் அடைந்தேன். எவ்வளவோ எடுத்துக்கூறியும் எனது பேச்சை கேட்காமல் மதுமதி தனது கள்ளக்காதலில் தீவிரமாக இருந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மதுமதியை கத்தியால் சரமாரியாக வெட்டினேன் என்றும் இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் எனவும் கூறியுள்ளார்.

பின்னர் தடயத்தை மறைப்பதற்காக மதுமதியின் உடலை 4 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டேன். அதில் 3 துண்டுகளை வீட்டில் உள்ள பிரிட்ஜில் அடைத்து வைத்தேன். மீதம் இருந்த ஒரு துண்டை குளியலறையில் மறைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலை தொடர்பாக கிரிஷ் கூறிய தகவல்கள் உண்மைதானா என்றும் கள்ளக்காதலன் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.