மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை : சவேந்திர சில்வா!!

692

Silvaமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இராணுவ சேவையை விட்டு தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் ஒருபோதும் கிடையாது. நான் ஒர் இராணுவ அதிகாரி. இராணுவத்திலேயே எனக்கு எதிர்காலம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக சாவேந்திரா சில்வா போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.