வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் விழா!!

217


வவுனியாவில் தைத்திருநாளாம் தைப்பொங்கல் இன மத வேறுபாடு இன்றி கொண்டாடப்பட்டது. அனைத்து இந்து ஆலயங்களிலும் காலையில் பொங்கல் பொங்கி இந்து மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் இந்துக்களின் வீடுகளிலும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதேவேளை வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் கிறிஸ்தவ இளைஞர்கள் மற்றும் பங்குத்தந்தையினால் பொங்கல் பொங்கப்பட்டது.


இதேவேளை வவுனியா பேரூந்து நிலையத்தில் தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினாலும் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினாலும் பொங்கல் பொங்கி பலகாரங்கள் பரிமாறப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் இடம்பெற்றது.

இதேவேளை வயது வேறுபாடின்றி வெடி கொழுத்தி மக்கள் தங்கள்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.