15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 20 வயது இளைஞர் கைது!!

797

abuseபெற்றோர் பொறுப்பில் இருந்த 15 வயதான இளம் யுவதியை அவர்களுக்கு தெரியாமல் கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சிலாபம், வென்னப்புவ, ஆதாம் சந்தி பகுதியில் உள்ள கூரை ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த யுவதியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீட்டில் இருந்த மகள் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொஸ்வத்தை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த யுவதியை மீட்டுள்ளதுடன் அங்கிருந்த சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேக நபரும் தானும் ஒரு வார காலம் காதலித்து வந்ததாகவும் இதன் பின்னர் சந்தேக நபர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவருடன் சென்றதாகவும் யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

யுவதி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் கூறினர்.

திருமணம் செய்யும் வயதை அடையாத பெண்ணை ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.