சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அனிருத்துக்கு விருது!!

502

anirudh11வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் 19 வரை சென்னையில் நடக்கிறது. இவ்விழாவை கமல், அமீர்கான் துவக்கி வைக்கின்றனர்.

இவ்விழாவை முன்னிட்டு உலக அளவில் விருதுகளை வென்ற பல திரைப்படங்கள் உள்ளிட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 150 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டும் போட்டி நடத்தப்பட்டது. இதில் பெஸ்ட் யூத் ஐகன் விருது அனிருத்துக்குக் கிடைத்துள்ளது.

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் படங்களில் பணியாற்றி சிறப்பாக இசை அமைத்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

19ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு போட்டியில் வென்ற கலைஞர்களுக்கு விருதுகளை வழங்க இருக்கிறார்.