அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய பரோட்டா சூரி!!

316

sooriசுசீந்திரன் இயக்கிய வெண்­ணிலா கப­டிக்­குழு படத்தில் அறிமுகமானவர் சூரி. அந்தப் படத்தில் 50 பரோட்­டாக்­களை சளைக்­காமல் வெளுத்துக் கட்­டி­ அப்ளாஸ் வாங்கினார். அதனாலேயே அவரின் பெயர் பரோட்டா சூரி என்­றாகிவிட்­டது.

ஆனாலும் பரோட்டா சூரி என்று அழைப்பது சூரிக்கு சுத்தமாகப் பிடிக்காது. எனக்கு பரோட்டாவே பிடிக்காதுண்ணே என வெள்ளந்தியாக சிரிப்பார். இப்போது சந்தானத்துக்கு அடுத்து காமெடி ரேஸில் சூரிக்கு அதிக வேல்யூ இருக்கிறது.

வருத்­தப்­ப­டாத வாலிபர் சங்கம் படத்தில் இவர் செய்த காமெடி ரசி­கர்­களின் ஆத­ரவைப் பெற்­றது. குறைந்த சம்­பளம், பந்தா இல்­லாத நடிப்பு என்ற பிளஸ் பாயின்டால் சந்­தா­னத்தின் கால்ஷீட் கிடைக்­கா­த­வர்கள் சூரியை மொய்க்கத் துவங்­கினர்.

அதனால்தான் சிம்பு, விஜய் படங்களில் சூரி பிஸியாக இருக்கிறார். தற்போது சூரியின் கால்ஷீட் டயரி நிரம்பி வழி­கி­றது. இதைப் பயன்­ப­டுத்தி தன் சம்­ப­ளத்­தையும் அதி­ர­டி­யாக உயர்த்தி விட்­டாராம் சூரி.

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்­டி­ருந்த சூரி இப்போது மூன்று லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.