என் குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல விருப்பப்படுகின்றேன் : ஷாருக்கான்!!

781

Saruk47 வயதாகும் இந்தி திரையுலக நடிகரான ஷாருக்கான் டெல்லியில் பிறந்திருந்தாலும் மறைந்த அவரது தந்தையார் தாஜ் முகமதுகானின் பூர்வீகம் பாகிஸ்தானில் உள்ள பெஷாவராகும். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராவார்.

தன்னுடைய பதினாறாவது வயதில் தந்தையுடன் பெஷாவருக்குச் சென்றதாக குறிப்பிடும் ஷாருக்கான் பெஷாவர், கராச்சி மற்றும் லாகூர் போன்ற ஊர்களின் இனிமையான நினைவுகள் இன்னமும் தன்னுடைய மனதில் இருப்பதாகக் கூறினார்.

தன்னுடைய உறவினர்கள் அங்கே வாழ்ந்து வருவதாகவும், தன்னுடைய மூன்று குழந்தைகளையும் தான் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹினா ரப்பானி கர் ஷாருக்கானை பாகிஸ்தானிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஷாருக்கான் தன்னுடைய ஆசைகளை இவ்வாறு வெளியிட்டார்.

மேலும் இரு நாடுகளும் தங்களிடையே உள்ள வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக, நட்புணர்வுடன் ஒரு குடும்பம்போல் ஒன்றாக செயல்படவேண்டும் என்ற தனது விருப்பத்தினையும் அவர் தெரிவித்தார். இரு நாட்டு மக்களும் மற்றவர்களிடத்தில் எந்த வெறுப்புணர்வும் கொண்டிருக்கவில்லை என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்கு மக்களிடையே கலாச்சார வேற்றுமைகள் காணப்படுவதில்லை. அதுபோல் கடந்த காலத்தை மறந்து நாம் இயல்பாக இருக்கவேண்டும் என்றும் ஷாருக்கான் தெரிவித்தார்.