ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளிக்கு விமானத் தடை!!

301

flightநேபாள நாட்டின் விமானங்களின் பாதுகாப்பின்மை கருதி ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ்வரும் 28 நாடுகளிலும் நேபாள விமானங்களை இயக்க இன்று முழு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் நடைபெற்ற விமான விபத்துகளில் நூற்றுக்கணக்கான ஐரோப்பியர்கள் பலியாகினர். இதனால் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த உறுப்பினர் நாடுகள் பாதுகாப்பற்ற விமானப் பயணங்களைத் தடை செய்ய ஏகமனதாக முடிவெடுத்தன.

பாதுகாப்பு அடிப்படையில் ஒன்றியம் தயாரிக்கும் கருப்பு பட்டியல் பொதுவாக வருடத்திற்கு இரண்டுமுறை சரிபார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய விமான நிலையங்களில் வெளிநாட்டு விமானங்கள் சரி பார்க்கப்படும்போது குறைகள் தென்பட்டாலோ அல்லது பிற விமான கட்டுப்பாட்டு நிறுவனங்கள் விமானங்களின் தரத்தில் குறையிருப்பதாக அறிவித்தாலோ அந்த விமான நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்று அவற்றின் பயணங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

பயணிகள் விமானங்கள் மட்டுமில்லாமல் சரக்கு விமானங்களின் பாதுகாப்பும் இந்த நாடுகளால் சோதிக்கப்படுகின்றன.
தற்போது 22 ஆவது முறையாக மேம்படுத்தப்பட்டுள்ள கருப்பு பட்டியலின்படி நேபாள நாட்டு விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளின்மீது பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த நாட்டு விமானங்களில் முன்பதிவு செய்துள்ள ஐரோப்பிய பயணிகளுக்கு அவர்களின் பணத்தை திரும்பப் பெற்றுத்தரவும், இந்தத் தகவலை சுற்றுலா பயணிகளுக்குத் தெரிவிக்கும்படியும் ஐரோப்பிய பயண முகவர்களும், ஏற்பாட்டாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நேபாள விமான நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பு காரணம் கருதி ஐரோப்பிய யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.