கடுங்குளிரில் வீசப்பட்ட பிஞ்சுக்குழந்தை : தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸ்!!

417

 

காப்பாற்றிய பெண் பொலிஸ்

பெங்களூரு மாநிலத்தில் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்த பிஞ்சு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய பெண் பொலிஸாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பெங்களூரு மாநிலம் எலகங்கா பகுதியை சேர்ந்தவர் கான்ஸ்டபிள் சங்கீதா எஸ் ஹலிமனி. இவர் அப்பகுதியில் சாலையோரத்தில், பெற்றோரால் தூக்கி வீசப்பட்டு கிடந்த பச்சிளங்குழந்தையை மீட்டுள்ளார்.

கடும் குளிரில் எறும்புகள் மொய்க்க கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும் போது , அவர்களின் அனுமதியுடன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், குழந்தை பிறந்து 10 முதல் 12 மணிநேரம் வரை மட்டுமே ஆகியிருக்கிறது.

குழந்தை பிறந்தது முதல் தாய்ப்பால் கொடுக்கப்படாமல் இருந்ததால், சர்க்கரை அளவு குறைந்து காணப்பட்டது. சங்கீதா சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததோடு, தாய்ப்பால் கொடுத்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது.

தற்போது நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். பின்னர் பெண் பொலிஸ் சங்கீதா பேசுகையில், தனக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருப்பதால் இந்த குழந்தையை தந்தெடுப்பது இயலாது என கூறியுள்ளார்.