வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து : இருவர் காயம்!!

929

 

வைத்தியசாலைக்குக்கு முன்பாக விபத்து

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (19.01.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

ஏ9 வீதி வழியாக வவுனியா நகருக்கு சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பாதசாரிகள் கடவையினை பாதசாரிகள் கடக்க முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி நின்றுள்ளது.

இதன் போது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியின் பின் புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த சிறுவன் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.