கடன் தொல்லை காரணமாக மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவன் : யாழில் சம்பவம்!!

749

abuseயாழ்.அரியாலை கிராமத்தில் வங்கி கடனை செலுத்துவதற்காக ஊர் மக்களிடம் பெற்ற கடனை மீளவும் செலுத்துவதற்காக மனைவியை விபச்சாரத்தில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரியாலை கிராமத்திலுள்ள ஒருவர் தான் வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக ஊர் மக்களிடம் கடன் பெற்று செலுத்தியுள்ளார். இந்நிலையில் ஊர் மக்களிடம் பெற்ற கடனை செலுத்துவதற்காக மனைவியை விபச்சாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனையடுத்து மனைவி யாழ்.பொலிஸ் நிலையத்தில் கொடுத்த முறைப்பாட்டின் படி கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த குடும்பஸ்தரின் வீட்டில் வெளிமாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த உறவுமுறை பெண் ஒருவர் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவருடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுமாறு தன்னை வற்புறுத்தியதாக, மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.