வவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா!!

1618

 

கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா

வவுனியா கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்தரத்தேர் பவனி இன்று(20.01) காலை இடம்பெற்றது.

சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட பிரமண்டமான 24 அடி உயரமும் 9 அங்குலமும் கொண்ட திராவிட மரத்தேர் நேற்றைய தினம் வெள்ளோட்டத்திற்கு விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முருகப்பெருமான் பிரதான வீதியூடாக பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்துள்ளார்.  இத் தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் கலந்துகொண்டு வடம்பிடித்து தேர் இழுத்தத்தை காணக்கூடியதாக இருந்தது.