105 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!!

593

 

இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கை வரலாற்றில் நூற்றுக்கும் அதிக ஆண்டுகளுக்கு பின்னர் மிக குறைந்த வெப்ப நிலை நேற்று நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதற்கமைய அந்த காலப்பகுதியினுள் நுவரெலியாவில் 4.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது பொதுவாக வெப்பநிலையை விடவும் 5 செல்சியஸ் குறைவான வெப்பமாக பதிவாகியுள்ளது.

1914 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 30ஆம் திகதி இறுதியாக நுவரெலியாவில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது 3.7 செல்சியஸ் ஆகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதம் இறுதி வரை நாட்டின் பல பிரதேசங்களில் வரட்சியான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது. அதற்கமைய எதிர்வரும் 7 நாட்களுக்கும் நாட்டில் காலை மற்றும் இரவு வேளையில் அதிக குளிரான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து சற்று குளிர் குறைவாக காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக இன்று காலை நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதி கூடிய வெப்பநிலையாக 33.2 செல்சியஸ் ஹம்பாந்தோட்டையில் பதிவாகியுள்ளது. அது சாதாரண வெப்பநிலையை விட 3 செல்யஸ் அதிகமாக குறிப்பிடப்படுகுின்றது.