இத்தாலியில் வாகன சாரதிகளை திணறடித்த பெண் யானை!!

873

Elephantஇத்தாலி தலைநகர் ரோமில் பணியாற்றும் போக்குவரத்து பொலிஸார் எப்போதும் போலவே வாகனங்களை முறைப்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சாலையின் வழியே ஓடிவந்த பெண் யானை பொலிஸாருக்கு கலவரத்தை உண்டாக்கியது.
எதிரே வரும் வாகனங்களுக்கு இடையில் கண்மூடித் தனமாக ஓடிய அந்த யானையை பிடிக்க பொலிஸாரும் பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தனர். சாலையின் குறுக்கும் நெடுக்குமா ஓடி சுமார் இரண்டு மணி நேரம் பெரும் ரகளையை ஏற்படுத்தியது.

அதற்குள் அங்கு வந்து சேர்ந்த சேக்கஸ் உதவியாளர்கள், பொலிஸாரிடம் மன்னிப்பு கோரியபடி அந்த பெண் யானையை தங்களின் கூடாரத்துக்கு அழைத்து சென்றனர்.