ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்புயல் : பரிதவிக்கும் மக்கள்!!

724

iceஐரோப்பா கண்டத்தில் சமீபத்தில் இங்கிலாந்து, ஜேர்மனி, நெதர்லாந்து, போலந்து, தெற்கு ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளில் ஸாவர் என்ற சூறாவளிப்புயல் கடுமையாக தாக்கியது.

மணிக்கு 158 கி.மீட்டர் வேகத்தில் சுழன்றடித்த சூறாவளியில் பல வாகனங்களும், வீடுகளும் சிக்கி சின்னா பின்னமாயின.
போலந்தில் 5 இலட்சம் வீடுகளும், சுவீடனில் 50 ஆயிரம் வீடுகளும், ஜேர்மனியில் 4 ஆயிரம் வீடுகளும் சேதம் அடைந்தன.

ஆம்ஸ்டர்டாம், பெர்லின், ஹம்பர்க் உள்ளிட்ட விமான நிலையங்கள் விமானங்களை இரத்து செய்தன. புயலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது இதனுடன் சேர்ந்து பனிப்புயலும் கடுமையாக தாக்குகிறது. கடுமையாக பனி கொட்டுகிறது. வடக்கு ஜேர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட கடல்களில் கடல் நீர் ஐஸ் கட்டிகளாக மாறிவிட்டன.

பனிப்புயலில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மரம் விழுந்ததில் சுவீடனில் ஒருவரும், போலந்தில் 6 பேரும் அடங்குவர்.

அமெரிக்காவின் மத்திய பகுதியில் கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் டெக்சாஸ், லூசியானா, ஆர்கன்சாஸ், கெண்டக்கு உள்ளிட்ட மாகாணங்கள் பனியால் மூடிக்கிடக்கின்றன.

டெக்காஸ்– மெச்சிகோ எல்லையின் வட கிழக்கில் இருந்து ஓகிபோ பள்ளத்தாக்கு வரையிலும் டல்லாஸ் பகுதியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

பனிக்கட்டிகள் உறைந்து மூடிக்கிடப்பதால் இங்கு மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர்.

பனிப்புயல் கடுமையாக வீசுவதால் நேற்று மட்டும் 1900 விமானங்களின் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்.

விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளதால் ஆர்கன்காஸ், மிஸ்சோரி, நியூ மெக்சிகோ, டெக்காஸ் மாகாணங்களுக்கு பார்சல்கள் கிடைக்கவில்லை. உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் 3 இஞ்ச் உயரத்துக்கு பனி படர்ந்து கிடக்கிறது. இதனால் வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. பனிபுயலில் சிக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

தெருவெங்கும் பனி படர்ந்து கிடப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.