திருமணத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் மீனா!!

1278

meenaநடிகை மீனாவுக்கு 2009ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்தார். 2011ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது மீனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

டிரைஷ்யம் என்ற மலையாள படத்தில் மோகன்லால் ஜோடியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. வருகிற கிறிஸ்துமசில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிகின்றன. அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. மீனா கதை கேட்டு வருகிறார்.