இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாரிய ஆபத்து!!

1334

 

பாரிய ஆபத்து

இலங்கையில் சேனா என்ற படைப்புழுவைப் போன்று மற்றுமொரு புதிய வகை புழு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல் மற்றும் சோளப் பயிர்களை நாசப்படுத்தும் இந்த புழு இனம் திம்புலாகல – மனம்பிட்டிய பிரதேசத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாவல் நிறத்தையுடைய இந்தப் புழுவின் உடலின் சில இடங்களில், செம்மஞ்சள் நிறமும் கலந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவை, ​நாற்று இலைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக குறித்த பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவை, நெற்கதிர்கள் மாத்திரமன்றி, நாற்று இலைகளையும் உணவாக உட்கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சேனா என்ற படைப்புழு சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு சோள செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய வகை புழு நெற்கதிர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.