வவுனியாவில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பு!!

1351

 

றிசாட் பதியுதீனுக்கு அமோக வரவேற்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று (24.01) வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

வவுனியா, இலங்கை போக்குவரத்து சபையின் சாலையில் இருந்து கண்டி வீதி வழியாக பெருமளவிலான ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சர் ஊர்வலமாக வாகனப் பவனியில் வவுனியா நகரசபை பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர் முத்து முஹம்மது தலைமையில் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

நகரசபையில் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் அமைச்சர் உரையாற்றியதுடன், ஆதரவாளர்களால் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.