மீண்டும் சிக்கலில் பிரியாணி திரைப்படம்!!

624

briyaniபிரியாணி படத்துக்கு தணிக்கை மேல் முறையீட்டு குழுவும் யு சான்று அளிக்க மறுத்து விட்டது. இந்த படத்தில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இறுதிக் கட்ட பட வேலைகளை முடித்து வருகிற 20ம் திகதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.

இதையடுத்து படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அக்குழு உறுப்பினர்கள் யு சான்று அளிக்க மறுத்து யு/ஏ சான்றிதழ் அளித்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

யு சான்று பெற்றால்தான் அரசின் கேளிக்கை வரியில் இருந்து தப்பிக்க முடியும். யு சான்று மறுக்கப்பட்டது ஏன் என்று இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது படத்தில் மது, பெண்களை பசங்க உஷார் பண்ணுவது, பார்ட்டி, நடனம் போன்ற காட்சிகள் உள்ளன என்றார். இதையடுத்து தணிக்கை மேல் முறையீட்டு குழுவுக்கு யு சான்று கோரி படத்தை அனுப்பினர். படம் பார்த்த மேல் முறையீட்டு குழுவினர் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர்.

வயது வந்தோர் பார்க்க கூடிய கதை கரு படத்தில் உள்ளது என்று கூறி விட்டனர். தணிக்கை குழு ஏற்கனவே அளித்த யு/ஏ சான்றிதழை ரத்து செய்ய முடியாது என்றும் உறுதியாக கூறிவிட்டனர். இதனால் வேறு வழியின்றி யு/ஏ சான்றோடு படத்தை வெளியிட உள்ளனர். இந்த படத்துக்கு அரசின் கேளிக்கை வரி விலக்கு கிடைக்காது.