நடிகைகள் பிசியானதும் கடும் உடற்பயிற்சி செய்து உடையை குறைப்பது வழக்கம். இதன் மூலம் இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இதற்கு மாறாக ஒல்லியாக இருக்கும் தமன்னா உடல் எடையை கூட்டி குண்டாகி வருகிறார்.
தமிழில் இதற்கு முன் ரிலீசான படங்களில் மெலிந்தே காணப்பட்டார். தெலுங்கு படங்களிலும் ஒல்லியாக வந்தார். ஆனால் திடீரென தற்போது எடையை கூட்ட துவங்கியுள்ளார். மூத்த நடிகை போல் தோற்றத்தை மாற்ற விரும்புவதே இதற்கு காரணம் என்கின்றனர்.
சமீப காலமாக பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தமன்னாவுக்கு வாய்ப்புகள் வருகிறது. தமிழில் அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடிக்கிறார். இது போல் தெலுங்கு படங்களிலும் மூத்த ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகள் வருகின்றன. இதற்காகவே நிறைய சாப்பிட்டு உடம்பை குண்டாக்கி முதிர்ச்சி தோற்றத்துக்கு மாறுவதாக கூறப்படுகிறது.





