வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது!!

412

mahaவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மோகன்லால் கிரேரோ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பாராளுமன்றத்pல் இடம்பெற்ற உயர்கல்வி, கல்வி கல்விச்சேவைகள், தொழிநுட்ப ஆராச்சி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதி தலைவருமான முருகேசு சந்திரகுமார்..

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயமும் இந்த விஞ்ஞான தொழில்நுட்பப் பிரிவுக்குள் உள்வாங்கப்பட்டாலும் துரதிஷ்டவசமாக அது அயிரம் பாடசாலைத் திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத பாடசாலையாகக் கணிக்கப்படுவதால் இந்த தொழில்நுட்பக் கல்வி வகுப்புக்களை அங்கு ஆரம்பிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.

அங்கு சுமார் 65 மாணவர்கள் இதற்குத் தகைமையுடையவர்களாக இருந்தபோதிலும் ஆயிரம் பாடசாலைத் திட்டத்துக்குள் அது உள்வாங்கப்படாத நிலைமையினால் அந்த மாணவர்கள் துரதிஷ்டவசமாக கலை வர்த்தகப் பிரிவுகளுக்குச் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 3200 மாணவர்களைக் கொண்ட அந்த மிகப் பெரிய பாடசாலைக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது.

இது விடயம் தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன். இது தொடர்பாக அமைச்சர் அவர்கள் உரிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கின்றரர். இன்று கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் எல்லாம் இங்கு வந்திருக்கின்றார்கள். இது தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். என உரையாற்றியிருந்தார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றிய பிரதி கல்வி அமைச்சர் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தினை ஆயிரம் பாடசாலைத்திட்டத்தின் உள்வாங்குவதற்கான நடவடிகைகள் இன்றைய தினமே எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்த பாடசாலை மகிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் உள்ளிட்ட ஆயிரம் பாடசலைத்திட்டத்தின் கீழ் வருகின்ற எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளது. குறிப்பாக 65 இற்கு மேற்பட்ட மாணவர்கள் தாங்கள் விரும்பிய தகவல் தொழிநுட்ப பாடநெறியை தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் கிட்டியுள்து என்பதும் குறிப்பிடத்தக்கது.