யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளம்பெண்ணின் திடீர் மரணம்!!

531

 

இளம்பெண் திடீர் மரணம்

யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் இளம் பெண் ஒருவரின் திடீர் மரணம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடமைபுரியும் 32 வயதான குலதீபன் பிரிந்தா என்ற கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் வேலை முடிந்து வீடு திரும்பிய நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.