இந்த ஆண்டின் படு மோசமான படம், இதெல்லாம் ஒரு படமா, இது படமல்ல – பெரும் தலைவலி., இதுக்கு மார்க்கே கிடையாது. வேணும்னா ஜீரோ போட்டுக்கலாம், இப்படியெல்லாம் விமர்சனங்களைச் சம்பாதித்துள்ளது பிரபு தேவா இயக்கத்தில் நேற்று வெளியான ஆர் ராஜ்குமார்.
ஷாகித் கபூர், சோனாக்ஷி சின்ஹா நடிக்க, பிரபு தேவா இயக்கியுள்ள படம் ஆர் ராஜ்குமார் நேற்று உலகமெங்கும் வெளியான இந்தப் படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்தப் படத்தை கடவுள் கூட காப்பாற்ற முடியாது உங்களை உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் மட்டுமே இந்த மாதிரி படங்களைப் பார்க்க முடியும். வேஸ்ட் படம், பாலிவுட்டின் மிகப்பெரிய ப்ளன்டர் ஆர் ராஜ்குமார் என இந்திய ஊடகங்கள் மோசமாக விமர்சித்துள்ளன.
சமீப நாட்களில் ஒட்டு மொத்த ஊடகங்களும் கூட்டாக கண்ட மேனிக்குத் திட்டியுள்ள படம் என்றால் அது அநேகமாக ஆர் ராஜ்குமாராகத்தான் இருக்கும்.





