சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சூதாட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கிறிஸ் கெய்ன்ஸ். போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து குற்றமற்றவர் என நிரூபித்தார்.
இந்நிலையில் கெய்ன்ஸ், டேரல் டபி, லூ வின்சென்ட் வீரர்களின் மீது சூதாட்ட விவகாரம் குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு மைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. இதனை ஐசிசியும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து முதன் முறையாக கெய்ன்ஸ், சூதாட்டம் குறித்து ஐசிசி விசாரணை நடத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது, என்னை விசாரணைக்கு யாரும் அழைக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரகசியமாக நடந்து கொண்டிருக்கும் இந்த விசாரணை குறித்து மீடியாவுக்கு எப்படி தகவல் கசிந்தது என்றும் இதனால் தனது குடும்பத்தினர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.





