மிஸ் ஏத் 2013 உலக அழகியாக வெனிசுவலாவின் ஆலிஷ் ஹென்ரிச்!!

632

ACCமிஸ் ஏத் 2013 அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் லாஸ் பினாஸ் நகரில் உள்ள வெர்சைல்ஸ் அலாபாங்கில் நடந்தது.

அதில் பல நாடுகளை சேர்ந்த 88 அழகிகள் கலந்து கொண்டனர். பலவித சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று இறுதிப் போட்டி நடந்தது.

அவர்களில் வெனிசுலாவை சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் என்பவர் மிஸ் ஏத் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 வயதான இவர் மொடல் அழகி ஆவார்.

இவர் தவிர மிஸ்ஏத் நெருப்பு அழகியாக கொரியாவை சேர்ந்த கத்ரீனா, மிஸ்ஏத் நீர் அழகி ஆக தாய்லாந்தை சேர்ந்த புனிகா குல்சூன் டோராட்டும், மிஸ் ஏத் காற்று அழகி ஆக ஒஸ்திரியாவை சேர்ந்த காதியா வாக்னரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மிஸ் ஏத் அழகி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலிஷ் ஹென்ரிச் மொடல் அழகி ஆவார். இவர் வெனிசுலாவின் பால்கான் மாகாணத்தில் உள்ள லாஸ் தகூள் நகரை சேர்ந்தவர்.

கடந்த மாதம் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியிலும் வெனிசுலா அழகி காபிரியலா இஸ்லெர் பட்டம் வென்றார். தற்போது அதே நாட்டை சேர்ந்த ஆலிஷ் ஹென்ரிச் மிஸ்ஏத் பட்டம் வென்றுள்ளார்.

அதன்மூலம் இந்த ஆண்டு நடந்த 2 அழகிப் போட்டிகளிலும் வெனிசுலா அழகிகள் பட்டம் பெற்றுள்ளனர்.