உமேஷுக்கு டோனி வாய்ப்பு கொடுக்க வேண்டும் : கங்குலி!!

513

umeshதென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த முதல் ஆட்டத்தில் மோசமாக தோற்றதால் இந்திய அணி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. வெளிநாட்டு மண்ணில் தொடக்க ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுவிட முடியாது. கடந்த கால வரலாறு அதை சொல்கிறது.

அணியில் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் தென் ஆபிரிக்காவில் முதன்முறையாக விளையாடுகிறார்கள். இதனால் இந்த தொடர் சவாலானது தான்.

உமேஷ் யாதவுக்கு டோனி வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் இனி வரும் ஆட்டத்தில் கண்டிப்பாக அவருக்கு டோனி வாய்ப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.