நான்கு வயது மகளை ஆற்றில் வீசிய தாய் நீதிமன்றில் கூறிய விடயம்!!

554

மகளை ஆற்றில் வீசிய தாய்

நான்கு வயதான மகளை கலா ஓயா ஆற்றில் வீசியதாக வாக்குமூலம் வழங்கியுள்ள புத்தளம் – கருவலகஸ்வெ வ – நீலாபெம்ப பிரதேசத்தைச் சேர்ந்த தாயை எதிர்வரும் 8ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புத்தளம் மேலதிக நீதவான் லஹிரு என் டி சில்வா முன்னிலையில் அவர் பிரசன்னப்படுத்தப்பட்டார். இதன்போது, குறித்த பெண், காவற்துறைக்கு வழங்கிய வாக்குமூலத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த மகளுக்கு, தம்மை விட பாட்டியின் மீது அன்பு அதிகம் என்று கூறியதால் ஏற்பட்ட கோபத்தை அடுத்து, அவரை அடித்ததாகவும், அதில் சிறுமி மயங்கி விழுந்ததாகவும் தாயாரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்கமடைந்த சிறுமியை அச்சம் காரணமாக கலாஓய ஆற்றில் வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வீசப்பட்ட சிறுமியின் சடலத்தை தேடும் பணிகள் கடந்த 7 தினங்களாக மேற்கொள்ளப்படுகின்றன.