பதுளை – ஸ்பிரிங்வெலி தோட்டம் முதலாம் பிரிவு பகுதி வீடொன்றில் சிறு ஆண் குழுந்தையொன்று பெற்றோல் அருந்தி உயிரிழந்துள்ளது.
ஜோதிராஜ் விஜே என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் தனது மோட்டார் சைக்கிளை தந்தை சுத்தம் செய்து கொண்டிருக்கையில் அருகில் இருந்த பெற்றோலை குழந்தை குடித்துள்ளது.
பின் மயக்க நிலை அடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. சடலம் பதுளை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.