மன்னியுங்கள் கோபத்தில் கொலை செய்துவிட்டேன் : நடிகை சந்தியாவை துண்டு துண்டாக வெட்டிய சினிமா இயக்குனர்!!

40


நடிகை சந்தியா கொலை


சந்தியாவை கொலை செய்து சடலத்தை துண்டு துண்டாக வெட்டிய வழக்கில் அவரது பாலகிருஷ்ணன் சிக்கியது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 21ம் திகதி இளம்பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர்.காலில் மெட்டி அணிந்திருந்ததால் திருமணமான பெண் என்றும், டாட்டூவை வைத்து வசதியான பெண் என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அடுத்தபடியாக அவரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


இதை பார்த்த நபர் ஒருவர், ட்வின்புரத்தில் இதுபோன்ற டாட்டூ போட்ட பெண்ணை பார்த்துள்ளேன் என தூத்துக்குடி ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளார். அடுத்தபடியாக தூத்துக்குடிக்கு விரைந்த பொலிசார் குறித்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் சந்தியாவின் வீட்டுக்கு சென்று விசாரித்த போது, அவர் சென்னை சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.


மேலும் எங்கே தங்கியுள்ளார் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், அவரது கணவர் ஜாபர்கான்பேட்டையில் வசிப்பதாகவும் விலாசத்தை கொடுத்துள்ளனர். சென்னை வந்து பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த, கூலாக பதிலளித்தவர், தனக்கும் மனைவிக்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றும், விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சந்தியா பச்சைக் குத்திக் கொண்டதில்லை எனவும் கூறியுள்ளார், இதனைதொடர்ந்து சந்தியாவின் போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியாவின் பெற்றோர் விலாசத்தை பாலகிருஷ்ணனிடம் வாங்கி கொண்ட பொலிசார் நாகர்கோவில் விரைந்துள்ளனர்.

புகைப்படத்தை பார்த்த சந்தியாவின் பெற்றோர்கள், தன் மகளும் இதுபோன்ற டாட்டூ வரைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் கடந்த நவம்பர் மாதம் தன் மகளை கடைசியாக பார்த்தோம் என்றும், கடந்த 20ம் திகதி தங்களுக்கு போன் செய்த பாலகிருஷ்ணன் சந்தியா வெளிநாடு செல்லவுள்ளதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த பொலிசார் சந்தியாவின் Call Details-யை எடுத்து பார்த்த போது, 14ம் திகதி பாலகிருஷ்ணன் எண்ணுக்கு தொடர்பு கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து Google cloud-ல் இருந்து அவரது புகைப்படங்களை எடுத்து பார்த்த போது கையில் டாட்டூ இருந்ததும் தெரியவந்தது.

இந்த தகவல்களுடன் பாலகிருஷ்ணனை மீண்டும் பொலிசார் சந்திக்க, அதிர்ச்சியில் உறைந்து போனவர், உண்மையை ஒப்புக் கொண்டாராம். ஆனால் முகத்தில் வருத்தமோ, பயமோ இல்லாமல் புன்முறுவலுடன் இருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சாரி சார், கோபத்துல கொன்னுட்டேன், சடலத்தை மறைக்க துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டேன் எனவும் தெரிவித்தாராம். இதனையடுத்து சந்தியாவின் தலை மற்றும் மற்றொரு கையை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.