சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 12 தமிழ்ப்படங்கள் : பட்டியல் வெளியீடு!!

635

filmடிசம்பர் 12ம் திகதி சென்னையில் 11வது சர்வதேச திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் 56 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.தமிழ்த் திரைப்படத்திற்கான போட்டிப் பிரிவுக்கு பல படங்கள் விண்ணப்பிக்கப்பட்டன.

விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் நடுவர்களாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோர் உள்ளனர்.இதில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் போட்டிக்கான தேதிக்கு முன்னதாக தணிக்கை சான்று பெற்றிருந்ததால் ரிஜக்ட் செய்யப்பட்டது.

சந்தோஷ் சிவனின் இனம்’ படத்தை அவரே போட்டியிருந்து விலக்கச் சொல்லிவிட்டார். மேலும் மூன்று படங்கள் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.இறுதியாக 12 படங்கள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. அவை:

1. ஆதலால் காதல் செய்வீர்
2. 6 மெழுகுவர்த்திகள்.
3. அன்னக்கொடி
4. ஹரிதாஸ்
5. கும்கி
6. மரியான்
7. மூடர்கூடம்
8. மூன்று பேர் மூன்று காதல்
9. பரதேசி
10. பொன்மாலை பொழுது
11. சூது கவ்வும்
12. தங்க மீன்கள்