பழைய ஜங் ஹீரோவாக மீண்டும் அஜித்தை பார்க்க நீங்கள் ரெடியா?

549

ajithமங்காத்தாவுக்கு முன்பு வரை தனது தலையில் உள்ள வெள்ளை முடிகள் வெளியில் தெரியாத அளவுக்கு கருப்பு டை அடித்து படங்களில் நடித்து வந்தார் அஜித். ஆனால், மங்காத்தாவுக்காக வெங்கட்பிரபுதான் அவரை நரைமுடியுடன் அதாவது அஜித்தின் ஒர்ஜினல் கெட்டப்பிலேயே நடிக்க வைத்தார்.

ஆனால் அப்படம் ஹிட்டானதோடு அஜீத்தின் புதிய கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் அதுவரை டை அடித்து வந்த அஜித்தின் பல ரசிகர்கள் அதன்பிறகு டை அடிப்பதையே நிறுத்தி தல பாணிக்கு மாறினர்.

பின்னர் ஆரம்பம் படத்திலும் அதே பாணியில் நடித்த அஜித், இப்போது நடித்து வரும் வீரம் படத்திலும் நரைமுடி கெட்டப்பில்தான் நடித்திருக்கிறார். ஆனால், அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்தில் மீண்டும் தலையில் கருப்பு டை அடித்து பழைய கெட்டப்புக்கு மாறப்போகிறாராம்.

இப்போது சிம்புவைக்கொண்டு இயக்கும் சட்டென்று மாறுது வானிலை படத்தை இந்தியாவிற்குள்ளேயே எடுத்து வரும் கெளதம், அஜித் படத்தின் கதைக்களம் அயல்நாடுகளுக்கும் செல்வதால் அவரை இன்னும ஸ்டைலிஷாக மாற்றுகிறாராம். கூடவே, யூத்தாகவும் மாற்றிக்காட்டப்போகிறாராம். அதற்காகவே நரைமுடிக்கு குட்பை சொல்லப்போகிறாராம் அஜித்.