போலி அமெரிக்க டொலர் வைத்திருந்தவருக்கு 6 வருட கடூழிய சிறை!!

918

jailபோலி அமெரிக்க 100 டொலர் பெுறமதியாக நான்கு தாள்களை வைத்திருந்த நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய 6 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இந்நபர் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி புறக்கோட்டை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னதாக இந்நபர் மீதான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தநிலையில் நேற்று வழக்கு விசாரணைகளின் பின்னதாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்நபர் குற்றத்தை ஏற்றுக் கொண்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.