கதிர்காமம் புனித பூமியில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 45 யாசகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று காலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அசிங்கமான வார்த்தை பிரயோகங்களை இந்த யாசகர்கள் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் குழந்தைகளை பயன்படுத்தி யாசகம் செய்த ஐந்து பெண்களும் அடங்குவதாக கதிர்காமம் பொலிஸார் கூறினர்.
இதற்கு முன்னரும் இவர்கள் பிடிக்கப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்று திஸ்ஸமகாராம நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
குறித்த யாசகர்கள் திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாக கதிர்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




