அபிவிருத்தியடைந்த நாடுகளின் இலங்கை தொடர்பான செயற்பாடுகள் அநீதியானது : யசூசி அகாஷி!!

558

Yasushi Akashiஇலங்கை தொடர்பான அபிவிருத்தியடைந்த நாடுகளின் செயற்பாடுகள் அநீதியானது என இலங்கைக்கான ஜப்பானிய விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட பல வளங்களை கொண்டுள்ள சில நாடுகள் இலங்கை மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பில் பொறுமையுடன் இருக்காதது அநீதியானது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பான முன்னேற்றங்கள், நாட்டின் முழுமையான நல்லிணக்க செயற்பாடுகள், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவுகள் உட்பட பல விடயங்கள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.

போருக்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி ஆச்சரியமானது எனவும் இந்த பின்னணியில் இருந்து செயற்பட அனைவரையும் ஊக்கப்படுத்துவதே தனது நோக்கம் எனவும் அகாஷி தெரிவித்துள்ளார்.