சீனா-பிரேசில் கூட்டு முயற்சியில் ஏவப்பட்ட விண்கலம் தோல்வி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

472

rocவிண்வெளித் துறையில் வேகமாக வளர்ந்து வரும் சீனா தற்போது வணிக ரீதியிலான விண்கலங்களை ஏவி வருகிறது.

இந்நிலையில், பிரேசிலின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்ட தூரப்பகுதிகளை பற்றி ஆராயும் சியூயான் ஐ-03 என்ற விண்கலத்தை லாங் மார்ச் 4-பி என்ற ரொக்கெட் மூலம் நேற்று ஏவியது.

சீனாவின் ஷாங்ஜி மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் அதன் சுற்றுவட்டப்பாதையை சென்று அடைவதற்கு முன்பே செயலிழந்தது. இதனால் இந்த ஆய்வு முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த தவறு குறித்து சீன பிரேசில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாக ராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா தனது படைப்புகளான நீண்ட தூர பயண ரொக்கெட்டுகளை வணிக ரீதியில் பயன்படுத்தி வருகின்றது.

உலக அளவில் கூட்டு முயற்சியில் வணிக ரீதியிலாக ஏவப்படும் செயற்கை கோள்களின் எண்ணிக்கையை 3ல் இருந்து 15 சதவிகிதம் வரை உயர்த்துவதற்கு முடிவெடுத்துள்ளதாக சீனா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.